‘ஓஷன் ஒடிஸி’ “Ocean Odyssey” என்ற சொகுசு பயணக் கப்பல் அமெரிக்காவில் இருந்து 108 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
‘ஓஷன் ஒடிஸி’ என்ற சொகுசு பயணக் கப்பல் அமெரிக்காவில் இருந்து 108 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பல் 105 மீற்றர் நீளம் கொண்டதாகும். இந்தியாவின் கொச்சின் துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள இந்த கப்பல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இலங்கையில் இருக்கும்.
108 செல்வந்த அமெரிக்க பயணிகளுடனான இந்த கப்பல் நாளை திருகோணமலை துறைமுகத்திற்கு செல்லவிருப்பதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது