மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் குடுப்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால்மாப் பொதி வழங்கப்பட்டுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி. இ. ராகுலநாயகி தலைமையில் , இதுதொடர்பான நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இப்பிரதேச செயலகப் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் 376 குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால்மா வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒவ்வொருவருக்கும் 400கிராம் பால்மா பொதிகள் இரண்டு வீதம் விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திரு. வி.துலாஞ்சனன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. ச.சசிகுமார், பாலையடிவட்டை இராணுவ முகாம் கேப்டன் நிமல் திசாநாயக்க , போரதீவுப்பற்று பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Fathima Nasriya