Darshan: நடிகர் தர்ஷன் மீது செருப்பு வீசிய சூப்பர் ஸ்டார் ரசிகர்: அதிர்ச்சி வீடியோ

Puneeth Rajkumar: தன் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் தர்ஷன் மீது புனீத் ராஜ்குமாரின் ரசிகர் ஒருவர் செருப்பை வீசிய வீடியோ வெளியாகி வைரலாகிவிட்டது.

தர்ஷன்கன்னட திரையுலகை சேர்ந்த தர்ஷன் நடித்திருக்கும் படம் கிராந்தி. அந்த படம் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இதையடுத்து படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் தர்ஷன். ஞாயிற்றுக்கிழமை மாலை கர்நாடக மாநிலம் ஹொசபேட்டையில் கிராந்தி படத்தில் வரும் ஒரு பாடலை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. அதில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்.
செருப்புஅங்கு கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் பேசினார் தர்ஷன். அவர் மேடைக்கு வந்தபோது கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் தன் செருப்பை தூக்கி தர்ஷன் மீது வீசினார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. செருப்பு வந்து விழுந்ததை பார்த்ததும் தர்ஷனின் ரசிகர்கள் கோபம் அடைந்தார்கள். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Twitter-GODZILLA
சமாதானம்தன் ரசிகர்கள் கொந்தளிப்பதை பார்த்த தர்ஷன் அவர்களை சமாதானம் செய்தார். யாரும் கோபப்பட வேண்டாம், தயவு செய்து அமைதியாக இருங்கள் என்று கூறி கூட்டத்தை கட்டுப்படுத்தினார். இதையடுத்து திட்டமிட்டபடி பாடல் வெளியிடப்பட்டது. தர்ஷன் மீது செருப்பை வீசியது மறைந்த கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமாரின் ரசிகர் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்திற்கு நடிகர் கிச்சா சுதீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுதீப்தர்ஷன் சம்பவம் பற்றி ட்விட்டரில் சுதீப் கூறியதாவது, அந்த வீடியோவை பார்த்து வேதனை அடைந்தேன். அந்த இடத்தில் படத்தின் ஹீரோயின் மற்றும் பலர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் நடந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை. பொது இடத்தில் இப்படி அசிங்கப்படுத்துவது நாம் கன்னட மக்கள் இது போன்று நியாயமில்லாமல் நடப்பதற்கு பெயர் போனவர்கள் என்று கேள்விகள் எழும் என்றார்.
Twitter-Kichcha Sudeepa
புனீத்சுதீப் மேலும் கூறியதாவது, புனீத் ரசிகர்களுக்கும், தர்ஷனுக்கும் இடையே எல்லாம் சரியில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இது போன்ற செயலை புனீத் ஆதரித்திருப்பாரா?. இதற்கான பதில் புனீத் ரசிகர்களுக்கே தெரியும். ஒருவர் செய்த காரியத்திற்காக அன்புக்கும், மரியாதைக்கும் பெயர் போன புனீத்தின் ரசிகர்கள் அனைவரின் பெயரும் கெடக்கூடாது என்றார்.
சிவராஜ்குமார்தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்திற்கு புனீத் ராஜ்குமாரின் அண்ணனும், நடிகருமான சிவராஜ்குமாரும் கண்டனம் தெரிவித்துள்ளார். படத்தை பொறுத்தவரை தர்ஷனை வைத்து கிராந்தியை இயக்கியவர் வி. ஹரிகிருஷ்ணா. அவர் படத்திற்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். கிராந்தி படத்தில் ரச்சிதா ராம், ரவிசந்திரன், சுமலதா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.