இந்தியாவில் 5ஜி சேவையை வழங்க 14 மாநிலங்களில் 20,980 செல்போன் கோபுரங்கள்! மத்திய அரசு தகவல்..

டெல்லி: இந்தியாவில் 5ஜி சேவையை வழங்க 14 மாநிலங்களில் 20,980 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. 5ஜிக்காக 20,980 அடிப்படை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன, வாரத்திற்கு சுமார் 2,500 அமைக்கப்டும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் தேவுசின் சவுகார்  மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி 5 ஜி சேவை தொடங்கப்பட்ட நிலையில், ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை வழங்கி வருகிறது.  தற்போது தமிழ்நாடு உள்பட  14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவையானது அமலில் இருக்கிறது. தற்போது இந்தியாவில் நிலையில், கூறிய விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனமும் 5ஜி சேவையை தொடங்க இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 50 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படும் நிலையில் அதில் 33 நகரங்கள் குஜராத்தில் மட்டுமே இருக்கிறது. அதன் பிறகு மத்திய பிரதேசம் மற்றும் உத்திரபிரதேசம் மாநிலத்தில் தலா 2 நகரங்களும், மகாராஷ்டிராவில் 3 நகரங்களிலும் 5ஜி சேவை இருக்கிறது.  இதனையடுத்து டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஹரியானா, அசாம், கேரளா, பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் தலா ஒரு இடத்தில் மட்டுமே 5ஜி சேவை இருக்கிறது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் மட்டுமே 5ஜி சேவை இருக்கிறது.

இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தேவுசிங் சௌகான்,  14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5ஜி சேவையை வழங்குவதற்காக 20,980 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது. அதற்கான அடிப்படை நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் அதிக பட்சமாக டெல்லியில் 5,829 செல்போன் கோபுரங்களும், மகாராஷ்டிராவில் 4,051 செல்போன் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு சராசரியாக 2500 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது என்றும், வாரத்திற்கு 2500 கோபுரங்கள் அமைக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.