பாடசாலையில் ஊடகக் கழகத்தினை அமைப்பதற்கான கருத்தரங்கு

பாடசாலையில் ஊடகக் கழகத்தினை உருவாக்குவதற்காக நடாத்தப்படும் ஒரு நாள் கருத்தரங்கு

ஊடகத்துறையில் நன்றாக அறிவூட்டப்பட்ட பல்துறை மற்றும் முனைப்பான மாணவர் சமூகத்தினை உருவாக்கும் நோக்கில் கண்டி எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் 2005/08ம் ஆண்டு வகுப்பினர் ஒன்றிணைந்து அமைத்துக் கொண்ட REAL ECCIANS அமைப்பினால் கல்லூரியில் பலமான ஊடகக் கழகமொன்றினை அமைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்துள்ள ஒரு நாள் ஊடக கருத்தரங்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ம் திகதி சனிக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 
 
தெல்தோட்டை ஊடக மன்றத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களால் குறித்த கருத்தரங்கில் விரிவுரைகள் நடாத்தப்பட உள்ளன.
 
இந்த கருத்தரங்கிற்கு தினகரன் தேசிய நாளிதழ் ஊடக அனுசரணை வழங்குகின்றது. இந்த கருத்தரங்கின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் மேற்கொள்கின்றனர்.
 
இந்த கருத்தரங்கின் மூலம் தெரிவு செய்யப்படும் மாணவர்களைக் கொண்டு பாடசாலையின் ஊடகக் கழகம் உருவாக்கப்பட உள்ளது. பின்னர் அக்கழக உறுப்பினர்களுக்கு மூன்று மாத ஊடக பயிற்சி நெறியொன்றை நடாத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
 

எஸ்.ஏ.எம். பவாஸ்

உப செயலாளர்

REAL ECCIANS 

மேலதிக தொடர்புகளுக்கு: 077 1909 968

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.