திருவனந்தபுரம்: மண்டலபூஜைக்கு 6 நாட்களே உள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்களை வழியில் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 33 நாட்களில் 21,70,548 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
