முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை குட்டியார் பள்ளி வடக்கு தெருவை சேர்ந்தவர் முகமது கட்டி. இவர் நேற்று காலை தனது வீட்டின் மாடிக்கு ஓய்வு எடுக்க சென்றார். அப்போது அங்கு சுமார் 6 அடி நீள கருநாக பாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதனை விரட்ட முயற்சித்தபோது, படமெடுத்தபடி கடிக்க முயன்றது.
இதனால் அதிர்ச்சியடைந்த முகமதுகட்டி முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த், தீயணைப்பு வீரர்கள் திரைசீலன், அருள்ஜோதி, பாலாஜி அமுதன் ஆகியோர் நீண்டநேரம் போராடி பாம்பு பிடிக்கும் கருவியை கொண்டு லாவகமாக பிடித்தனர். பின்னர் காட்டு பகுதியில் விட்டனர்.