தமிழ் சினிமா வட்டாரங்களில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பது துணிவு மற்றும் வாரிசு தான். தமிழ் சினிமாவின் இரு துருவங்களான அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் பல வருடங்களுக்கு பிறகு ஒரே தினத்தில் வெளியாகின்றன.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வீரம் மற்றும் ஜில்லா படங்களை தொடர்ந்து எட்டு வருடங்கள் கழித்து வாரிசு மட்டும் துணிவு வெளியாகின்றது. வம்சியின் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார்.
Rajini: எதிர்பாராத கூட்டணியுடன் இணையும் தலைவர்..இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!
தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் நாளை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பிரமாண்டமாக நடக்கவுள்ளது. மறுபக்கம் வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படமான துணிவு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மறுபடியும் போலீஸ் கேரக்டர் ஏன்? Aakrosham Movie Team Interview
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் இவ்விரு படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மோதவுள்ளது. தற்போது எந்த படத்திற்கு அதிக திரையரங்கங்கள் கிடைக்கும், எந்த படம் வசூலில் முந்தும் என்ற பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தற்போது அயல்நாட்டில் முன்பதிவில் எந்த திரைப்படம் டாப்பில் உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய்யின் வாரிசு திரைப்படம் தான் முன்பதிவில் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த நிலவரம் இன்னும் சில நாட்களில் மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது