அபாகஸ் ஒலிம்பியாட் சர்வதேசப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் 18 பதக்கங்களை வென்று நேற்று (23) நாட்டை வந்தடைந்தனர்.
இப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 18 மாணவர்கள் பங்குபற்றியுள்ளனர். 18 மாணவர்களும் பதக்கங்களை வென்றுள்ளமை விசேட அம்சமாகும்.
தாய்வானின் தாய்பே நகரில் கடந்த 12 முதல் 20 வரை நடைபெற்றது.
இந்த அபாகஸ் ஒலிம்பியாட்டு போட்டி பல வயதுக் குழுக்களின் அடிப்படையில் நடைபெறும் உலகின் அதிவேக கணிதப் போட்டியாகும்.