தோல்வியில் இருந்து மீட்ட அஸ்வின்: 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்தியா


வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா வெற்றி

வங்கதேச அணியுடனான ஒருநாள் போட்டியை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்த பிறகு, வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான வெற்றியை பதிவு செய்து இருந்த இந்திய அணி, தொடரை கைப்பற்றும் முனைப்பில் கடந்த 22ம் திகதி மிர்பூரில் தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.

முதல் இன்னிங்ஸில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 227 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில் ரிஷப் பந்த் 93 ஓட்டங்களும் ஸ்ரேயஸ் ஐயர் 87 ஓட்டங்களும் குவிக்க இந்திய அணி 314 ஓட்டங்கள் எடுத்து 87 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

பின் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணி 231 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்ததை தொடர்ந்து, இந்திய அணிக்கு 145 ஓட்டங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

போட்டியின் மூன்றாவது நாளில் எளிய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்து இருந்தது.

தோல்வியில் இருந்து மீட்ட அஸ்வின்: 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்தியா | 2Nd Test India Won Against Bangladesh Ashwin

கேப்டன் கே.எல் ராகுல் 2 ஓட்டங்களில் வெளியேற, அவரை தொடர்ந்து சுப்மன் கில் 7, சேதேஸ்வர் புஜாரா 6, விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்திய அணி முக்கியமான 4 விக்கெட்டுகளை முதல் 37 ஓட்டங்களிலேயே இழந்தது.

மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்து தோல்வியைத் தவிர்க்க போராடிக் கொண்டிருந்தது.

தோல்வியில் இருந்து மீட்ட அஸ்வின்: 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்தியா | 2Nd Test India Won Against Bangladesh Ashwin

இந்நிலையில் வெற்றிக்கு 100 தேவை என்ற நிலையில் நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் அஸ்வின் சிறப்பாக விளையாடி 42 ஓட்டங்கள் குவித்தார்.

ஆட்டநாயகன் அஸ்வின்

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், இந்திய அணியின் இக்கட்டான சூழ்நிலையில் 42 ஓட்டங்கள் குவித்து அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர் நாயகனாக செதேஷ்வர் புஜாரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.