பிக்பாஸ் மேடையில் அழுத கமல்ஹாசன்! ஏன் தெரியுமா?

இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்களை காட்டிலும் இந்த பிக்பாஸ் சீசன் சற்று சுவாரஸ்யம் குறைவாக இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.  நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இத்தனை நாட்கள் ஆகியும் இன்னும் பலரது உண்மை முகங்கள் முழுவதுமாக வெளிவரவில்லை என்றும் சிலர் கருதி வருகின்றனர்.  21 போட்டியாளர்களுடன் கலகலப்பாக ஆரம்பமான இந்த நிகழ்ச்சியிலிருந்து ஜி.பி.முத்து, ஷாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ராம், ஆயீஷா மற்றும் ஜனனி ஆகிய போட்டியாளர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.  இந்த வாரம் தனலக்ஷமி நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்றது, இதில் ஆரம்பப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கலை கல்லூரி என ஒவ்வொரு காலக்கட்டங்களுக்கும் ஏற்ப ஹவுஸ்மேட்ஸ்கள் மாற வேண்டும் என்று கூறப்பட்டது.  இதில் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சமந்தாவின் ஸ்கூல் கெட்டப்பில் ரச்சிதா காட்சியளித்தார், இவருக்கும் விக்ரமனுக்கும் இடையேயான காட்சிகள் ரசிக்க வைத்தது.  அதன்பின்னர் ஒருபுறம் போட்டியாளர்கள் ஒருவரும் தங்களுக்கு விருப்பமான ஒரு நபருக்கு கடிதம் எழுதி வாசிக்க, மறுபுறம் போட்டியாளர்கள் அழுக என அந்த டாஸ்க்கே சென்டிமெண்டாக போனது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல்ஹாசனையே போட்டியாளர் ஒருவர் அழுக வைத்திருக்கிறார், அந்த போட்டியாளர் வேறு யாருமில்லை விக்ரமன் தான்.  அந்த ப்ரோமோவில், கமல் விக்ரமன் நம்முடைய பெரிய தகப்பன் ஒருவருக்கு கடிதம் எழுதினார் என்று கூறிய உடனே, விக்ரமன் புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் என்று கூறுகிறார்.  அதனைத்தொடர்ந்து தனக்காக ஒரு பைசா கூட சேர்த்து வைக்காத தந்தை அவர் என்று விக்ரமன் அவரது பெருமைகளை பேசி புகழாரம் சூட்ட கமல் மறுபுறம் தனது கண்களில் கண்ணீரை வரவழைக்கிறார்.  பிறகு கமல் தானும் கையில் ஒரு கடிதத்தை எடுத்து 90களில் எழுதிய கடிதம் என்று நினைக்கிறேன், இந்த கடிதத்தை எழுதும்போது உங்களை மாதிரியே எனக்கும் கண்ணீர் வந்தது, அன்புள்ள மோகன் என்று கூறுவதுடன் அந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.