
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் சிறுவயல் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஜூலியஸ் ரவிச்சந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், தலைமை ஆசிரியர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக மாணவிகள் தெரிவித்த புகாரின்பேரில் கிராமத்தினர் முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து நடைபெற்ற விசாரணையில் அங்கு பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் ஜெயபால் என்பவர் மாணவிகளை மிரட்டி தலைமை ஆசிரியர் குறித்து புகார் தெரிவிக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்த மாணவிகளின் பெற்றோர் 200க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.
அதில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் புகார் கொடுத்த தலைமை ஆசிரியர் மீதும், அவர் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் அவரை காப்பாற்றும் ஆங்கில ஆசிரியர் ஜெயபால் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
newstm.in