கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி மாற்றுத்திறனாளி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் புத்தநந்தல் பகுதியை சேர்ந்தவர் அருள் பாண்டி (23). இவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்நிலையில் அருள் பாண்டி கெடிலம் ஆற்றுப்பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான விவசாய நிலத்திலிருந்த மாட்டை பிடித்துள்ளார்.
அப்பொழுது மாடு இழுத்துச் சென்றதால் அருள்பாண்டி எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து இவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கம் தினர் அருள்பாண்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அருள்பாண்டி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸ் சார் அருள்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.