மதுரை: சீனாவிலிருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி கொரோனா பிஎப்7 தொற்று குறித்து கடந்த மூன்று நாட்களாக விமான நிலையத்தில் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை 9:40 மணியளவில் இலங்கையில் இருந்து ஏர்லங்கா விமானத்தில் 70 பயணிகளுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. இந்நிலையில் அந்த ஏர்லங்கா விமானத்தில் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த பயனியிடம் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் பிரதிபா (வயது39) என்ற பெண் மற்றும் அவரது 6 வயது மகள் பிரித்தியங்கார ரிகா குழந்தைக்கும் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து., தற்போது விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியில் தங்கியுள்ள பிரதிபா மற்றும் குழந்தை பிரித்தியங்கார ரிகாவை சுகாதாரத்துறை அதிகாரிகள் 15 நாட்கள் தன்மை படுத்தியுள்ளனர். இவரது கணவர் சுப்பிரமணியம் சீனாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் மனைவி மற்றும் குழந்தையும் சேர்ந்து இருந்துள்ளனர். தற்போது சுப்பிரமணியம் வேலைக்காக ஜெர்மனி சென்றுள்ளார். இதனால் குடும்பத்தினர் தமிழகம் திரும்பிய நிலையில் கொரானா தொற்று உறுதியான நிலையில் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. இதனை தொடர்ந்து., மதுரை விமான நிலையத்தில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் தீவிர பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மேலும்., இலங்கை விமானத்தில் வந்த 70 பயணிகளுக்கும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.