திருமலை : ஜனவரி 1ம் தேதி முதல் திருப்பதியில் 9 இடங்களில் இலவச தரிசனம் டோக்கன்கள் வழங்க படும் என ஏழுமலையான் கோவிலின் செயல் அலுவலர் அணில் குமார்சிங் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்காக ஜனவரி 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாயில் வழியாக பத்தர்கள் அனுமதிக்க பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அதிகாரி அணில் குமார்சிங் நேரில் ஆய்வு செய்தார்.
வைகுண்ட வாயில் தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட்கள் 2 லட்சம் எண்ணிக்கையில் வழங்கப்பட்டுளதாக கூறினார். மேலும் இலவச தரிசனத்திற்காக டோக்கன்கள் ஜனவரி 1ம் தேதி முதல் வழங்க படும் என்றும், 10 நாட்களுக்கான டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இலவச தரிசனம் பெற்ற பத்தர்கள் திருமலையில் உள்ள கிருஷ்ணர் தேஜா ஓய்வு இல்லத்திற்கு உரிய நேரத்தில் வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
