சீனாவில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவம் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 22 வயது மாணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக மாணவரான அப்துல் ஷேக் என்பவர், தனது மருத்துவ படிப்பை முடித்து சீனாவில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் இந்தியா திரும்பிய அவர், டிசம்பர் 11ம் தேதி மீண்டும் சீனாவுக்கு திரும்பினார்.
சீனாவிற்கு எட்டு நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, அவர் வடகிழக்கு சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள கிகிஹார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனை அறிந்து அதிர்ச்சியில் உறைந்த மாணவரின் குடும்பத்தினர், அவரது உடலை மீட்டு வர வெளியுறவு அமைச்சகத்திடம் உதவி கேட்டுள்ளனர். பொருளாதாரத்தில் நலிவடைந்த அவரது குடும்பத்தினர், மாணவரின் உடலைக் கொண்டுவர தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in