
இயக்குநர் வெங்கட் பிரபு படத்தின் கஸ்டடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ‘கஸ்டடி’ திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார்.

இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், ‘கஸ்டடி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
newstm.in