காத்மாண்டு : நேபாளத்தில் மூதாட்டியை கொலை செய்த வழக்கில் 23 வயது இந்தியரை அந்நாட்டு போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தில் அர்கஹாகான்சி மாவட்ட வனப்பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் 60 வயது பெண்ணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவரின் பெயர் ராதா தாபா எனவும் அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க இந்தியாவின் ஹரியானாவைச் சேர்ந்த சுஷாந்தா சிங் 23 திட்டமிட்டதும் தெரியவந்தது.
இங்கு வசிக்கும் சுஷாந்தா சிங் சமீபத்தில் ராதா தாபா அருகிலுள்ள வனப்பகுதிக்கு செல்வதைப் பார்தது அவரை பின் தொடர்ந்துள்ளார். பின் பலமான ஆயுதத்தால் அவரது தலையில் தாக்கி நகைகளை கொள்ளையடித்தார்.
மயங்கி கீழே விழுந்த ராதா தாபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வனப்பகுதியில் தலைமறைவாக இருந்த சுஷாந்தா சிங்கை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement