காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலம் தலைவராக இருந்த சோனியா காந்தி, தனக்குப்பிந் தனது மகன் ராகுல் காந்தியை தலைவராக்கினார். ஆனால் கடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகினார். அந்த பதவி மீண்டும் சோனியா காந்திக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, 20 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டு அந்த பதவி மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டது.