
தமிழ்நாடு முழுவதும் போலீசார் இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபடுவதும், ரோந்து பணியில் ஈடுபடுவதும் வழக்கம். இந்த நிலையில் சென்னையில் விபத்தை தவிர்க்கும் வகையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவரை போலீசார் ஆங்காங்கே பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். இந்த சூழலில் சம்பந்தப்பட்ட நபரின் வாகனமும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பெண் ஒருவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிவந்த நிலையில் போலீசாரிடம் அபராதம் கட்ட பணமில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். காலையில் வந்து வாகனத்தை எடுத்து செல்லுங்கள் என்று போலீசார் கூறினர். ஊதுனா வண்டி தரேன்னு தானே சொன்னீங்க என் வண்டிய குடுங்க நான் போறேன் என்று அந்த பெண் ரகளையில் ஈடுபட்டார்.
ஒருகட்டத்தில், யார் தான் சார் குடிக்கல, நான் டெய்லி குடிச்சிட்டு தான் வண்டி ஓட்டிட்டு போறேன். அப்போல்லாம் பிடிக்கல, இப்போ ஏன் பிடிச்சிருக்கீங்க. உங்க வீரத்தை பொண்ணு கிட்ட தான் காட்டுவீங்களா என்று கூச்சலிட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.