மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியவர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே வந்தே பாரத் ரயில் விபத்துகளில் சிக்கி உடைவதாக சர்ச்சை ஏற்பட்டது. மற்ற ரயில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், வந்தே பாரத் ரயில் தரமாக தயாரிக்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பினர் விமர்சித்தனர்.
அதே போல், வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்ற சம்பவங்களும் நடைபெற்றன. இந்நிலையில் தற்போது வந்தே பாரத் ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிலர் கற்களை வீசும் காட்சி சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதால், அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில், ஹவுரா முதல் புதிய ஜல்பைகுரி பகுதி வரை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை கடந்த 30ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் மீது கடந்த 2 நாட்களில் 2 முறை கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலில் ரயில் கண்ணாடிகள் சேதமடைந்தன. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் ரயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் இளைஞர்கள் 4 பேர் ரயில் மீது கற்களை வீசும் காட்சி பதிவாகியுள்ளது.
newstm.in