சிங்கமுத்து மகனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

காமெடி நடிகர் சிங்கமுத்துவின் மகன் கார்த்திக். அய்யன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு சங்கரா, மாமதுரை, கொடை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பிறகு வாய்ப்புகள் இன்றி இருந்த அவர் தற்போத உயிர்துளி என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை காமராசு, அய்யா வழி, நதிகள் நனைவதில்லை படங்களை இயக்கிய பி.சி.அன்பழகன் தயாரித்து இயக்குகிறார்.

எஸ்.ஏ.சந்திர சேகர், வாகை சந்திர சேகர், சரவணன், கஸ்தூரி, கோமல் ஷர்மா, சீதா, ரோஷன், காவியா, நித்யமது, கலை, கவிதா ஸ்ரீ, பிரியதர்ஷினி, எலிசபெத், சிங்கமுத்து, மதன்பாப், ரவிமரியா, ரோபோ சங்கர், மதுரை முத்து, பவர்ஸ்டார், அருள்மணி, போண்டா மணி, ரெங்கநாதன், வையாபுரி, ஜெயமணி, தாம்ஸன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார், ஜாட்ரிக்ஸ் இசை அமைக்கிறார்.

“கதாநாயகி இல்லாமல் , கதையே நாயகனாக கொண்ட உயிரோட்ட சம்பவங்களின் தொகுப்பே உயிர்த் துளி. கொடைக்கானலில் நடந்த சம்பவத்தை, கொடைக்கானலிலேயே ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்துகிறோம்” என்கிறார் இயக்குனர் அன்பழகன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.