சென்னை: தலைநகர் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும், 46வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைத்தார். சென்னையில் ஆண்டு தோறும் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் (பபாசி) சார்பில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. பாபசியின் 46 ஆவது புத்தக கண்காட்சி ஆகும். முன்னர் சென்னையில் 41 முறையும், மதுரையில் 12 முறையும் கோவையில் 4 முறையும் இந்த புத்தகக் கண்காட்சி நடைபெற்றுள்ளது. இந்தியாவில் […]