
விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள ‘வாரிசு’ உள்ளிட்ட 100க்கும் அதிகமான திரைப்படங்களில் கலை இயக்குநராக பணிபுரிந்த சுனில் பாபு மாரடைப்பால் நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 50.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சுனில் பாபு(வயது 50) இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல படங்களில் கலை இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். ‘எம்.எஸ்.தோனி’, ‘கஜினி’, ‘சீதா ராமம்’, ‘பெங்களூர் டேஸ்’, ‘துப்பாக்கி’, ‘பிரேமம்’ உள்பட 100 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.

இறுதியாக விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள ‘வாரிசு’ திரைப்படத்திற்கு கலை இயக்குநராக பணிபுரிந்தார். இந்நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுனில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவருடைய மரணம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.