95 பிரித்தானியர்களை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்ட பிரான்ஸ்: ஆனால்…


பிரான்ஸ், 95 பிரித்தானியர்களை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டதாக ஐரோப்பிய ஒன்றிய தரவுகள் தெரிவிக்கின்றன.

95 பிரித்தானியர்களை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்ட பிரான்ஸ்

பிரெக்சிட் மாற்றக் காலகட்டம் முடிவடைந்த பின், 95 பிரித்தானியர்களை நாட்டைவிட்டு வெளியேற பிரான்ஸ் உத்தரவிட்டதாக ஐரோப்பிய ஒன்றிய தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என கூறப்படுகிறது.

காரணம், 2020க்கும் 2022க்கும் இடையில் இவ்வாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள பிரித்தானியர்களின் எண்ணிக்கை சுமார் 2,250. அவர்களில், புலம்பெயர்தல் ஆவணங்கள் முறையாக இல்லாதது மற்றும் வேறு காரணங்களுக்காக நாடுகடத்தப்பட்டவர்கள் முதலானோர் அடங்குவர்.

இந்த 2,250 பேரில் 1,050 பேர் ஸ்வீடனால் வெளியேற உத்தரவிடப்பட்டவர்கள் என்னும் நிலையில், அதிக அளவில் பிரித்தானியர்கள் வாழும் நாடான பிரான்ஸ் வெறும் 95 பிரித்தானியர்களை மட்டுமே நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது என்ற கண்ணோட்டத்தில் இந்த விடயம் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

95 பிரித்தானியர்களை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்ட பிரான்ஸ்: ஆனால்... | France Ordered To Leave The Country



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.