தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் ஆர்.என்.ரவி உரையின் சிறப்பம்சங்கள்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. காலை 10 மணிக்கு அவை கூடியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற தொடங்கினார். அப்போது
திமுக
கூட்டணி கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்தனர். அவரை பேசவிடாமல் எழுந்து நின்று முழக்கங்கள் எழுப்பினர்.

திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

இருப்பினும் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். பின்னர் காங்கிரஸ், மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளியேறவில்லை. இதற்கிடையில் ”தமிழக சகோதர சகோதரிகளே… வணக்கம்!” எனத் தமிழில் கூறி உரையை தொடங்கினார் ஆளுநர். அதுமட்டுமின்றி உரையில் இருந்த ”தமிழ்நாடு” என்ற வார்த்தையை அவ்வாறே வாசித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு vs தமிழகம் சர்ச்சை

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்றிருப்பதே சரி என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையாகி ஆளுநருக்கு எதிராக கண்டனங்கள், சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள், அறிஞர் அண்ணா அளித்த விளக்கங்களை சுட்டிக் காட்டியது என சலசலப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரின் உரை மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள்

அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு அரசு சிறந்து விளங்குகிறது.இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட அரசின் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மேகதாது அணை கட்டக் கூடாது என்பதிலும், நீட் தேர்வு தேவையில்லை என்பதிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது.மாநில உரிமையை பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது. அதுமட்டுமின்றி கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவையும் நீட் பறிக்கிறது.நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரிடம் உள்ளது. மத்திய அரசு கேட்ட விளக்கங்கள் அனைத்தும் அனுப்பப்பட்டு விட்டன.’பேராசிரியர் அன்பழகன் பள்ளி வளர்ச்சி திட்டம்’ மூலம் அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளது.தரமான கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்க அரசு உறுதி பூண்டுள்ளது.சர்வதேச அளவிலான செஸ் போட்டியை தமிழ்நாடு அரசு பிரமாண்டமாக நடத்தியது.சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் நடக்கும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.வளர்ந்த நாடுகளை போல தமிழகத்திலும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.பெரியார் நினைவு சமத்துவபுர திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தின் மூன்றாவது தொழில்நுட்ப பூங்கா, மதுரையில் 600 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வருகிறது.மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டது.இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 1.35 கோடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.மினி டைடல் பார்க் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.