ஏ.டி.எம்., வேன் பாதுகாவலரை கொன்று ரூ.8 லட்சம் கொள்ளை| Killed the ATM and van security guard and looted Rs 8 lakh

புதுடில்லி, புதுடில்லியில், ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்ப வந்த வேனில் இருந்த பாதுகாவலரை சுட்டுக் கொன்று, 8 லட்சம்ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.

புதுடில்லியின், வாஸிராபாத் பகுதியின் ஜகத்பூர்மேம்பாலம் அருகே, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஏ.டி.எம்., உள்ளது.

இங்கு பணம் நிரப்ப தினமும் வரும் வேன், நேற்று மாலை 4:50 மணிக்கு வந்தது. முன் இருக்கையில் ஜெய் சிங், 55, என்ற பாதுகாவலர் துப்பாக்கியுடன் அமர்ந்திருந்தார்.

அப்போது, பின்னால்இருந்து வந்த நபர் திடீரென பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, 8 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பினார்.

பாதுகாவலர் ஜெய் சிங், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

குற்றவாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்களில்பதிவான காட்சிகள் வாயிலாக குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.