சென்னை குரோம்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநிலத்தை சேர்ந்து பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த வடமாநிலபின் மற்றும் வாலிபர் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர்கள் வைத்திருந்த சூட்கேஸை சோதனை செய்ததில் 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தஸ்லிமா பிவி மற்றும் பழைய ராமாபுரத்தை சேர்ந்த அசோக் குமார் என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.