சென்னை: சென்னை அருகே படப்பையில் மார்ச் 5-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார். படப்பையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 501 காளைகள். 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் ஜல்லிக்கட்டை கண்டுகளிக்கும் விதமாக படப்பையில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
