இந்தியா உலகப்புகழ் பெறுகிறது! சர்வதேச அளவில் கிடைத்த உயரிய விருது..கமல்ஹாசன் வாழ்த்து


RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்ததற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டு நாட்டு பாடல்

கடந்த ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் RRR. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டியது.

மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்ற ”நாட்டு நாட்டு” என்ற பாடல் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த 80வது கோல்டன் குளோப் விழாவில் ‘Best Original Song’ பிரிவில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் விருதினை வென்றுள்ளது.

பாடலை இசையமைத்த எம்.எம்.கீரவாணி, பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோர் இந்த விருதை பெற்றனர்.

எம்.எம்.கீரவாணி/M.M.Keeravani

இந்தியா உலகப்புகழ் பெறுகிறது! சர்வதேச அளவில் கிடைத்த உயரிய விருது..கமல்ஹாசன் வாழ்த்து | Kamal Haasan Wish To Rrr Team Golden Globe

ஆஸ்கருக்கு விருதுக்கு அடுத்தப்படியாக உயரிய விருதாக கோல்டன் குளோப் கருத்தப்படும் நிலையில், இந்திய பாடல் ஒன்றுக்கு இந்த விருது கிடைத்துள்ளதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் வாழ்த்து

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், ‘தொடர்ந்து பார் புகழ் பெறுகிறது இந்தியா. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் குளோப் விருது வென்று தந்திருக்கிறார் எம்.எம்.கீரவாணி. முன்னமே யூடியூபில் 11 கோடி பார்வைகளைத் தாண்டிய பாடல் இது. வாழ்த்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்/Kamal Haasan

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.      





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.