கேரள பாஜக தலைவர் மீது குற்றப்பத்திரிக்கை; பழிவாங்கும் நடவடிக்கை என சாடல்.!

கேரளாவில் நடைபெற்ற கடந்த சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) வேட்பாளர் கே.சுந்தராவுக்கு, மஞ்சேஸ்வரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு லஞ்சம் கொடுத்து மிரட்டியதாக மாநில பாஜக தலைவர் மீது வழக்கு உள்ளது.

இந்தநிலையில் மஞ்சேஸ்வரம் தேர்தல் லஞ்ச வழக்கை விசாரித்த குற்றப்பிரிவு, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் மற்றும் 5 கட்சித் தலைவர்கள் மீது காசர்கோடு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்தநிலையில் லஞ்ச வழக்கில் கேரள பாஜக தலைவர் கே சுரேந்திரன் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை, பழிவாங்கும் அரசியலை மாநில அரசு செய்வதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ‘‘எஸ்என்சி லாவ்லின் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல்வர் பினராயி விஜயன், பழிவாங்கும் அரசியல் செய்கிறார். பாஜக தலைவர் சுரேந்திரன் வழக்கில் பொய்யான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார், அதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.

பாஜக தலைவர் சுரேந்திரனுக்கு எதிரான வளர்ச்சி பிடிக்காமல், நான்கு நாட்களுக்குப் முன்னதாக அவர் மாநில கட்சி பிரிவுக்கு தொடர்ந்து தலைமை தாங்குவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையின் நேரமும் முக்கியமானது. இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டும் பாஜகவை அவதூறு செய்ய திட்டமிட்டன. ஆனால், பாஜக தலைவர் சுரேந்திரன் கட்சியை தொடர்ந்து வழிநடத்துவார் என்று நான் அறிவித்த நான்கு நாட்களுக்குப் பிறகு குற்றப்பத்திரிகை வந்தது.

“என்ன வழக்கு? புகார்தாரர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார், ஆனால் வாபஸ் பெற்றார். பாஜக அலுவலகத்திற்கு வந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினார், சுரேந்திரனுக்கு ஆதரவு தெரிவித்தார். இப்போது இதுதான் வழக்கு. இதுதான். கேரளாவில் பழிவாங்கும் அரசியல் எப்படி விளையாடப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சுக்கு குவியும் கண்டனம்.!

கேரளாவில் பா.ஜ.க.வுக்கு அதிகரித்து வரும் செல்வாக்கு, கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கு பொறுக்கவில்லை. இரு கட்சிகளும் ஒன்றாக இருப்பதால், மக்கள் தற்போது பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதனால் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஆளும்கட்சி ஈடுபட்டு வருகிறது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.