பான் கார்டை ஒற்றை வணிக ஐடியாகப் பயன்படுத்த ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

டெல்லி : பான் கார்டை ஒற்றை வணிக ஐடியாகப் பயன்படுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பல சேவைகளுக்கு ஆதார் மற்றும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது மக்களுக்குப் பெரும் தொல்லையாக இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகளில் சில தளர்வுகளைப் ஜனவரி 31 ஆம் தேதி பட்ஜெட் அறிக்கையின் போது அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் பான் கார்டு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்படத் திட்டமிட்டு வருவதாகவும், இதற்கான அறிவிப்பு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 2வது ஆட்சி காலத்தின் கடைசிப் பட்ஜெட் அறிக்கையில் வெளியிடப்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் அங்கீகரித்த குறைந்தது 20 வெவ்வேறு ஐடிகள் உள்ளன. இதில் நிரந்தர கணக்கு எண்ணை அனைத்து செயல்முறைகளுக்கும் பிரத்யேக தொழில் அடையாளமாக மாற்றுவதற்கான சட்டம் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்படலாம். ஒரு நபர் அல்லது நிறுவனம் தங்களது பான் கார்டை தற்போதுள்ள வேறு ஏதேனும் அடையாளங்களுடன் இணைக்க அனுமதிக்கும் விதியை இச்சட்டம் உள்ளடக்கியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.