பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் எம்.பி பணியிடை நீக்கம்: கொரோனா தடுப்பூசி குறித்த பேச்சுக்கு பிரதமர் கண்டனம்



கொரோனா தடுப்பூசியை படுகொலையுடன் ஒப்பிட்ட பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் எம்.பி ஆண்ட்ரூ பிரிட்ஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உலகை அச்சுறுத்திய கொரோனா

கடந்த 2019 ஆண்டு சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய பின் உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.

முதல் அலை, இரண்டாம் அலை என மாறி மாறி உலக நாடுகளை இந்த கொரோனா வைரஸ் தாக்கி வருவதால் பெரும்பாலான மக்கள் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவித்து வருகின்றனர்.

வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையுடன், கொரோனா வைரஸ் பரவால் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டு சாவின் விளிம்பில் நிற்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

இவை ஒருபுறம் இருக்க கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் மீதும் பெருவாரியான வதந்திகள் பொதுமக்கள் மத்தியில் உலா வந்து கொண்டு இருக்கிறது.

இந்த வதந்திகள் காரணமாக பெரும்பாலான மக்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடிய தடுப்பூசிகளை எடுத்து கொள்ளாமல் தவிர்த்து வருகின்றனர்.


பிரித்தானிய எம்.பி பணியிடை நீக்கம்

இந்நிலையில் பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி ஆண்ட்ரூ பிரிட்ஜன் கொரோனா தடுப்பூசிகளை படுகொலைகளுடன் ஒப்பிட்டு பேசியதை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வடமேற்கு லெய்செஸ்டர்ஷயர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ பிரிட்ஜன் இது தொடர்பாக தெரிவித்த கருத்தில், இரண்டாம் உலகப் போரின் போது லட்சக்கணக்கான யூதர்கள் நாஜி ஜெர்மனியால் கொல்லப்பட்ட பிறகு, கொரோனா தடுப்பூசி தான் மனிதகுலத்திற்கு எதிரான மிகப் பெரிய குற்றம் என சாடியிருந்தார்.

 இந்த சர்ச்சை கருத்தை தொடர்ந்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ பிரிட்ஜென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் ஆண்ட்ரூ பிரிட்ஜென் கருத்து முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஆண்ட்ரூ பிரிட்ஜென் கருத்துக்கு எதிர்ப்புகள் மற்றும் கண்டனங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில் தன்னுடைய தவறுதலான கருத்தினை திரும்ப பெறுவதாகவும், இதனால் யாரேனும் காயமடைந்து இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.