சினிமாவில் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது: 'பிரபல கதாநாயகி' பிரணிகா

தமிழ் பொண்ணுங்க சாதிக்க முடியாது என சொன்னவங்க மத்தியில் திறமை இருந்தால் சாதிக்கலாம் என நிரூபித்து இளசுகளின் மனதை கவர்கிறார் திருச்சியை சேர்ந்த பிரணிகா. சின்னத்திரை, வெப்சீரிஸ் என நடிப்பில் திறமையை வெளிப்படுத்தி தற்போது வெள்ளித்திரையிலும் கால்பதிக்க ஆரம்பித்துள்ளார். இவரிடம் ஒரு நேர்காணல்

திரையுலகத்திற்கு வந்தது…
சாதாரண குடும்பம் தான் நாங்க. 2020ல் பாவம் கணேசன் சீரியலில் ஸ்ரீமதி கேரக்டரில் நடித்தேன். அதன் பின் காமெடி ராஜா, கலக்கல் ராணி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். கனா காணும் காலங்கள் சீரியலில் பார்வதி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தேன். தற்போது மீனாட்சி பொண்ணு சீரியலில் நடிக்கிறேன்.

வதந்தி வெப்சீரிஸ் வரவேற்பு எப்படி இருந்தது…
அதில் பெண் போலீசாக நடித்தது வரவேற்பை பெற்றது. அதன் மூலமாக வாய்ப்புகள் அதிகம் வருகிறது. விளம்பரங்களிலும் நடிக்கிறேன்.

கதாநாயகியாக வலம் வருவது எப்போது…
நல்ல கதையை தேர்வு செய்து நடிக்கலாம்னு இருக்கேன். தற்போது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கிறேன். சினிமாவில் அதிகம் கற்கவேண்டியவிஷயம் இருக்கு.

சினிமாவிற்கு வரும் பெண்களுக்கு சொல்வது..
திறமை இருந்தால் சினிமாவில் சாதிக்கலாம். தமிழ் பெண்கள் தான் தற்போது உலக நாடுகளை ஆளும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்கள். தங்களுக்கான திறமையை நிரூபிக்க பல மேடைகள் உருவாகி விட்டது. அதன் மூலம் திறமையை உலகறிய செய்யலாம். வாய்ப்புகளை தவற விடக்கூடாது.

இளம்தலைமுறைக்கு நீங்க சொல்வது…
எந்த முடிவும் எடுப்பதற்கு முன் யோசித்து செயல்படுங்கள்.

உடலை ஆரோக்கியமா வைக்க…
டான்ஸ், யோகா, கராத்தே பயிற்சியில் ஈடுபடுகிறேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.