டெல்லி போலீசார் இரண்டு தீவிரவாதிகளை நேற்று கைது செய்தனர். நௌஷாத் மற்றும் ஜக்ஜீத் சிங் ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தங்கியிருந்த சாரதா காலனியின் வாடகை வீட்டின் அருகே உள்ள கழிவுநீர்க் கால்வாயில் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இதில் தீவிரவாதிகளுக்குத் தொடர்பு இருக்குமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த தீபாவளிக்கு இருவரும் இப்பகுதியில் குடிவந்து பல்வேறு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.