நேபாளத்தின் பொக்காராவில், 72 பேருடன் சென்ற விமானம் திடீரென இன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக வெளியான தகவலின்படி, நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 68 பயணிகள், 4 பணியாளர்கள் என 72 பேரை ஏற்றிச்சென்ற எட்டி ஏர்லைன்ஸின் (Yeti Airlines) விமானம், பொக்காரா சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் திடீரென விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
இது குறித்துப் பேசிய எட்டி ஏர்லைன்ஸின் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா, “பழைய விமான நிலையத்துக்கும் பொக்காரா சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையில் விபத்துக்குள்ளான எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தில் மொத்தம் 68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர்” என்று தெரிவித்தார்.
#Breaking: Yeti Airlines flight from Kathmandu crashes in Pokhara, Nepal, with 72 people onboard with at least 70 people are dead#Nepal | #Asia#Yeti Airlines ATR-72 aircraft crashes near #Pokhara from #Kathmandu. Deeply saddened by the loss! Thoughts go out to the victims. pic.twitter.com/l7AAjshA5t
— Zain Khan (@ZKhanOfficial) January 15, 2023
தற்போது தீப்பிடித்த விமானத்திலிருந்தவர்களை காப்பாற்றுவதற்கான மீட்புப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. நேபாள ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி இதுவரை 16 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர் எனக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.