நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து இன்று காலை எட்டி ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 10:33 மணிக்கு பொக்காரா புறப்பட்டது. இந்த விமானத்தில் 68 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் என மொத்தம் 72 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், விமானம் பொக்காரா பகுதி அருகே திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானம் விழுந்ததும் மளமளவென தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு உள்ளூர் வாசிகள் அலறி அடித்துக்கொண்டு அப்பகுதிக்கு சென்றனர். சம்பவ இடத்துக்கு மீட்பு குழுவினர்விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இடிபாடுகளில் எரியும் தீ காரணமாக மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு பின்னர் தீயை அணைத்தனர். தற்போது வரை இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் தகவல் இல்லை. இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
