வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூ ஓர்லியான்ஸ்:அமெரிக்காவில் நேற்று முன்தினம் இரவு நடந்த, 2022 ம் ஆண்டுக்கான, ‘மிஸ் யுனிவர்ஸ்’ எனப்படும், பிரபஞ்ச அழகி போட்டியில் அமெரிக்க அழகியான ரபோனி கேப்ரியல் முதலிடம் பிடித்தார். அவருக்கு கடந்தாண்டு பிரபஞ்ச அழகியான இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து, கிரீடம் அணிவித்து பட்டத்தை அளித்தார்.
![]() |
பிரபஞ்ச அழகிக்கான போட்டி அமெரிக்காவின் லுாசியானா மாகாணம் நியூ ஓர்லியான்சில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், இந்தியாவைச் சேர்ந்த திவிதா ராய் உட்பட, 85 பேர் பங்கேற்றனர்.
இதில் பிலிப்பைன்சை பூர்விகமாக உடைய அமெரிக்க அழகி, ரபானி கேப்ரியல் முதலிடத்தைப் பிடித்தார் வெனின்சுலா மற்றும் டொமினிக்கன் குடியரசின் அழகிகள் அதற்கடுத்த இடங்களைப் பிடித்தனர். கடைசி, 16 பேரில் இடம்பெற்றிருந்த இந்தியாவின் திவிதா ராய், பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
![]() |
கடந்தாண்டு பிரபஞ்ச அழகியான இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து, புதிய பிரபஞ்ச அழகி கேப்ரியலுக்கு கிரீடம் அணிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement