திண்டிவனம் அருகே மது போதையில் ரவுடி நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி கௌதம் என்பவர், பொங்கல் பண்டிகை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அடுத்துள்ள எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில் தனது நண்பர்களை சந்திப்பதற்காக நேற்று இரவு வந்துள்ளார்.
பின்னர் நண்பர்கள் கபிலன். சத்யராஜ் மற்றும் ரவுடி கௌதம் ஆகிய மூன்று பேரும் தென்பெண்ணையாற்று மேம்பாலத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது மதபோதையில் ரவுடி கௌதம் மற்றும் அவனின் நண்பன் கபிலனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுது.
இதில், ஒருவரை ஒருவர் சராமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது தான் மறைத்து வைத்திருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை எடுத்த ரவுடி கௌதம், கபிலன் மீது வீசியதாக சொல்லப்படுகிறது.
அப்போது நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் யாருக்கும் காயமின்றி உயிர் தப்பித்தனர். அதே சமயத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் அதிபயங்கர சத்தத்தால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது சம்பவ இடத்தில் ரவுடி கௌதம், அவனின் நண்பர்கள் கபிலன், சத்யராஜ் ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தனர்.
இதை அடுத்து பொதுமக்கள் அவர்கள் மூன்று பேரையும் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தனர். மூன்று பேரையும் கைது செய்த போலீசா,ர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடித்தனர்.
மேலும் ரௌடி கௌதம் மீது புதுச்சேரியில் கொலை, கொள்ளை, போலீசாரின் துப்பாக்கியை திருடியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.