
ஆகஸ்ட் 24, 2010: ஒரு சிறிய அக்னி ஏர் விமானம் காத்மாண்டு அருகே மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கியது. அதிலிருந்த நான்கு அமெரிக்கர்கள், ஒரு ஜப்பானியர் மற்றும் ஒரு பிரிட்டிஷ் நாட்டவர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

டிசம்பர் 15, 2010: கிழக்கு நேபாளத்தில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஒன்றில் பயணம் செய்த 22 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவருமே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பூட்டானைச் சேர்ந்த யாத்ரீகர்கள். மேலும் ஓர் அமெரிக்கரும் இதில் உயிரிழந்தார்.

செப்டம்பர் 25, 2011: எவரெஸ்ட் சிகரத்தைச் சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற சிறிய விமானம் ஒன்று, காத்மாண்டு அருகே மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 19 பேரும் உயிரிழந்தனர்.

மே 14, 2012: இந்திய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற அக்னி ஏர் விமானம் ஒன்று, வடக்கு நேபாளத்திலுள்ள ஜோம்சோம் விமான நிலையத்துக்கு அருகே விபத்துக்குள்ளானதில் 15 பேர் இறந்தனர், 6 மட்டும் பேர் உயிர்த் தப்பினர்.

செப்டம்பர் 28, 2012: எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி 19 பேருடன் பயணித்த விமானம் நேபாள தலைநகரின் புறநகரில் தீப்பிடித்து எரிந்தது. விமானத்திலிருந்த ஏழு பிரிட்டானியர்கள், ஐந்து சீனர்கள் உட்பட அனைவரும் உயிரிழந்தனர்.

பிப்ரவரி 16, 2014: அர்ககாஞ்சி மாவட்டத்தில் நேபாள ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மீட்புப் பணியாளர்கள், உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் மலைப்பகுதிகளில் சிதறிக்கிடப்பதைக் கண்டனர்.

பிப்ரவரி 24, 2016: தாரா ஏர் நிறுவனம் மூலம் இயக்கப்படும் ட்வின் ஓட்டர் விமானம் மியாக்டி மாவட்டத்திலுள்ள மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. அதில், விமானத்தில் பயணம் செய்த 23 பேரும் உயிரிழந்தனர்.

மார்ச் 12, 2018: பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலிருந்து காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம், கால்பந்து மைதானத்தில் சறுக்கி, தீப்பிடித்து எரிந்தது. மிக மோசமான இந்த விமான விபத்தில் 51 பேர் இறந்தனர்.

ஏப்ரல் 14, 2019: எவரெஸ்ட் சிகரத்துக்கு அருகே புறப்படும்போது ஓடுபாதையிலிருந்து விலகிய சிறிய விமானம் இரண்டு ஹெலிகாப்டர்களை மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் இதில் காயமடைந்தனர்.

மே 29, 2022: தாரா ஏர் நிறுவனத்தின் ட்வின் ஓட்டர் விமானம் மேற்கு நேபாளத்திலுள்ள பொக்காராவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதில் 22 பேர் இறந்தனர்.

ஜனவரி 15, 2023 (இன்று): எட்டி ஏர்லைன்ஸின்(Yeti Airlines) ஏ.டி.ஆர்-72 விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களிலேயே, விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.