திஹாம்கர்,
மத்திய பிரதேசத்தில் திட்டி, அடித்து கொடுமைப்படுத்திய தாயை, சுட்டுக்கொலை செய்த 16 வயது மகனை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு திஹாம்கர் நகரில் 16 வயது மகனுடன், ஒரு தம்பதி வசித்து வந்தனர்.
இதில் கணவர், வங்கி காவலாளியாக பணியாற்றி வரும் நிலையில், அவரது மனைவி, 43, மகனின் செயல்பாடுகளை கண்டித்து வளர்த்து வந்தார்.
பல சமயங்களில் திட்டியும், அடித்தும் தன் மகனை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொறுமை இழந்த சிறுவன், தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது துப்பாக்கியை எடுத்து தாயை நேற்று சுட்டுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே அவனது தாய் உயிரிழந்த நிலையில், அச்சிறுவனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளான்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அச்சிறுவனை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement