அமெரிக்காவின் கலிஃபோனியா மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 மாத குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
70,000 மக்கள் வசிக்கும் துலாரே நகரில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து மறைந்திருந்த மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச் சென்றனர்.
திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில் தலையில் குண்டு பாய்ந்து பச்சிளம் குழந்தை உட்பட 6 பேர் பலியாகினர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வீட்டில் கடந்த வாரம் போதைப் பொருள் தொடர்பான விசாரணையில் போலீசார் ஈடுபட்ட நிலையில், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல் இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.