கல் குவாரி குட்டையில் விழுந்து 2 குழந்தைகள் உட்பட தம்பதி தற்கொலை: கடன் பிரச்னையால் விபரீதம்

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயன்படுத்தாத கல் குவாரி குட்டையில் விழுந்து 2 குழந்தைகள் உட்பட தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநிலம் பர்த்வானின் அசன்சோல் பகுதியில் வசிக்கும் இருக்கும் 300 அடி ஆழம் கொண்ட தண்ணீர் நிரம்பிய பயன்படுத்தாத கல் குவாரியில், இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரின் சடலங்கள் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 4 பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்:
குடும்பத்தில் ஏற்பட்ட கடன் பிரச்னையால் பிஜோய் ரவுத் (45), அவரது மனைவி நமிதா (35), அவர்களின் 10 வயது மகன் கிருஷ்ணா மற்றும் மூன்று வயது மகள் லோடோ ஆகியோர் பயன்படுத்தாத கல் குவாரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர்.  முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், 4 பேரும் நீரில் மூழ்கியதால் மரணங்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநில மின் விநியோக நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகன பிஜோய் ரவுத் பணியாற்றி வந்தார்.

கடன் பிரச்னையால் ஏற்பட்ட மன அழுத்ததில் 4 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.