திமுக மூத்த அமைச்சரின் நெருங்கிய உறவினர் மரணம்… விழுப்புரம் விரைந்த உதயநிதி!

விழுப்புரத்தில் பிரபல சிறுநீரக சிறப்பு மருத்துவரும், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் உடன் பிறந்த தம்பியுமான, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கௌதமசிகாமியின் சித்தப்பாவுமான கே தியாகராஜன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார. மருத்துவர் தியாகராஜன் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உதயநிதி அஞ்சலி: அவரது உடல் இன்று சென்னையில் இருந்து விழுப்புரம் கொண்டுவரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் அவருக்கு சொந்தமான மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தியாகராஜரின் உடலுக்கு விளையாட்டுத் துறை அமைச்சரும் இளைஞரணி செயலாளருமான உதயாநிதி ஸ்டாலின் இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

முன்னதாக மருத்துவ தியாகராஜன் உடலுக்கு நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே. என் நேரு, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினரும் கழகத் துணைப் பொதுச் செயலாளருமான ஆ ராசா, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிசங்கர், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணா, பேரறிவாளன், அலரது தாயார் அற்புதம்மாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கடலூர் புகழேந்தி ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர்கள் அஞ்சலி:
சென்னையில் இன்று காலமான மருத்துவர் கா தியாகராஜனின் உடல், விழுப்புரத்தில் உள்ள அவருக்கு சொந்தமான மருத்துவமனையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ .வ வேலு, வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கே கணேசன், துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிவலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், கிரிராஜன் உள்ளிட்டோரும் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.