காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டப்பகலில் மூதாட்டியிடம் 12 சவரன் தங்கச் செயினை பறித்து சென்ற இளைஞர் சிசிடிவி உதவியால் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த குணசுந்தரி என்ற மூதாட்டி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 12 சவரன் எடையுள்ள இரண்டு தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றார்.
தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சியை கைப்பற்றி அதன் மூலம் திருடனை பிடித்தனர்.