ரோகித் சர்மா சதம் அடிக்க முடியாம திணற என்ன காரணம்? இதான் அவர் பிரச்சனை என்கிறார் ஜாம்பவான்


ரோகித் சர்மா ரன் குவிக்க முடியாமல் திணறுவது தொடர்பாக ஜாம்பவான் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாச முடியாமல் சமீபகால தொடர்களில் தவிக்கிறார். வழக்கமாக நல்ல துவக்கம் கிடைத்தால் அதை மிகப்பெரிய ஸ்கோராக மாற்றுவதற்கு கை தேர்ந்தவர் ரோகித் சர்மா.

ஆனால் சமீபகாலமாக அதை அவர் செய்யத் தவறி வருகிறார்.
இது குறித்து பேசிய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் ரோகித் சர்மா விளையாடுவதை பார்க்கும் பொழுது அவர் ஃபார்மில் இல்லை என்று கூறவே முடியாது.

ரோகித் சர்மா சதம் அடிக்க முடியாம திணற என்ன காரணம்? இதான் அவர் பிரச்சனை என்கிறார் ஜாம்பவான் | Rohit Sharma Batting Method Century Sanjay

Getty Images

அவரது பேட்டில் இருந்து நன்றாக ரன்கள் வருகிறது. நல்ல பார்மிலும் இருப்பது போல தெரிகிறது. ஆனால் அவருக்கு கிடைத்த துவக்கத்தை மிகப்பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் திணறி வருகிறார்.

திறமையான வீரர்

வழக்கமாக நல்ல துவக்கம் கிடைத்தால் 100 ரன்கள் அடிக்காமல், அதை 150, 200 ரன்கள் ஆக மாற்றக்கூடியவர்.
அதேபோல் 10-15 ஓவர்கள் களத்தில் நின்றுவிட்டால், 40 ஓவர்களுக்கும்மேல் நின்று விளையாடக்கூடிய திறமையான வீரர்.

சமீபகாலமாக நன்றாக துவக்கம் கிடைத்தாலும், பெரிதாக மாற்றமுடியவில்லை என்பதை கவனித்து சரி செய்து கொள்ள வேண்டும். அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்றார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.