லட்சக்கணக்கான பறவைகளுக்கு எதிராக போர் தொடுக்கும் நாடு! என்ன காரணம்?


கென்யா (Kenya) லட்சக்கணக்கான பறவைகளுக்கு எதிராக போரை அறிவித்துள்ளது. ஏன் என்பதற்கான காரணத்தை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

பறவைகளைக் கொன்று குவிக்கும் கென்யா

கென்யா நாட்டு அரசாங்கம் கிட்டத்தட்ட 60 லட்சம் சிவப்பு-பில்டு க்யூலியா (red-billed quelea) பறவைகளைக் கொல்லத் தொடங்கியது. இது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பறவை இனங்களாகும், அவை ‘இறகுகள் கொண்ட வெட்டுக்கிளிகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

கோதுமை, பார்லி, அரிசி, சூரியகாந்தி மற்றும் சோளம் போன்ற பயிர்களை உண்ணும் இந்தப் பறவைகள் 3 கோடி வரையிலான ஒரு பாரிய நாடோடி கூட்டமாக உருவாக முடியும்.

லட்சக்கணக்கான பறவைகளுக்கு எதிராக போர் தொடுக்கும் நாடு! என்ன காரணம்? | Kenya Declares War Against Millions Of BirdsLinn Currie/Shutterstock.com

கென்யா ஏன் ரெட்-பில்ட் க்யூலியா பறவைகளைக் கொல்ல விரும்புகிறது?

சோமாலியா, எத்தியோப்பியா, எரித்திரியா, ஜிபூட்டி, சூடான், கென்யா மற்றும் தெற்கு சூடான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதி மிக நீண்ட மற்றும் மிகக் கடுமையான வறட்சியை எதிர்கொள்கிறது, இது லட்சக்கணக்கான மக்களை பட்டினியால் வாட்டுகிறது.

தொடரும் இந்த வறட்சியானது க்யூலியா பறவைகளின் முக்கிய உணவு ஆதாரமாக இருக்கும் பூர்வீக புற்களின் (Grass) அளவைக் குறைத்துள்ளது. இதனால், அப்பறவைகள் அதிகளவில் தானிய வயல்களுக்கு படையெடுக்கின்ற.

இதுவரை, கென்யாவில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் பறவைகளால் அழிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லட்சக்கணக்கான பறவைகளுக்கு எதிராக போர் தொடுக்கும் நாடு! என்ன காரணம்? | Kenya Declares War Against Millions Of BirdsGetty Images

உணவு மற்றும் விவசாய அமைப்பின்படி (FAO), 2 மில்லியன் மக்கள் ஒரு நாளில் 50 டன் தானியங்களை உட்கொள்ள முடியும்.

ஆனால், மேற்கு கென்யாவில் உள்ள விவசாயிகள் பறவைகளால் 60 டன் தானியங்களை இழக்க நேரிடுகிறது. 2021-ஆம் ஆண்டில், பறவைகளால் ஏற்படும் பயிர் இழப்பு ஆண்டுதோறும் 50 மில்லியன் டொலர்களாக FAO மதிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே உணவு பற்றாக்குறையால் வாடும் மக்களுக்கு இப்பாவைகள் மேலும் இடையூறாக மாறியிருப்பதால், வேறு வழியின்றி அவற்றை கொல்ல அரசாங்கமே முடிவுசெய்தது.

நிபுணர்கள் எச்சரிக்கை

லட்சக்கணக்கான பறவைகளுக்கு எதிராக போர் தொடுக்கும் நாடு! என்ன காரணம்? | Kenya Declares War Against Millions Of BirdsGetty Images

அதே சமயம், க்யூலியா பறவைகளுக்கு எதிரான இயக்கம் பிற காட்டு இனங்களுக்கு விளைவுகளை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

க்யூலியா பறவைகளைக் கொல்ல ஃபென்தியான் எனும் பூச்சிக்கொல்லி தெளிக்கப்படுகிறது. ஆனால், இந்த பூச்சிக்கொல்லி “மனிதர்களுக்கும் மற்ற இலக்கு அல்லாத உயிரினங்களுக்கும் நச்சுத்தன்மை வாய்ந்தது” என்று ஆராய்ச்சியாளர்களால் விவரிக்கப்பட்டுள்ளது.

எனவே, வல்லுநர்கள் ரெட்-பில்டு க்யூலியாவைக் கொல்ல ஃபென்தியனைப் பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரித்துள்ளனர்.

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.