பாஜக பிரிமுகர்களில் ஒருவர் விமானம் புறப்பட்ட போது அவசரகால கதவை திறந்ததாக தகவல் வெளியாகி சர்ச்சையானது.
விமானம் புறப்பட்டபோது அவசரகால கதவு திறப்பட்டதால் பயணிகள் மீண்டும் இறக்கிவிடப்பட்டு பாதுகாப்பு சோதனை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய அமைச்சகத்தின் தலையீட்டின் பேரில் அரசு மூடி மறைக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் விமர்சனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பிருந்தனர். விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் தலையீட்டின் பேரில் இந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டதா என காங்கிரஸ் கேள்வி எழுப்பினர்.
2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் Emergency கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி. pic.twitter.com/yzWrd97dxs
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) January 17, 2023
இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுமா என தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் விமர்சனம் வலுத்ததால் விமானத்தின் அவசரகால கதவு திறந்தது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணைக்கான குறிப்பிட்ட விமானத்தில் பயணித்த பாஜக பிரமுகர்கள் அழைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் 10ம் தேதி சென்னை – திருச்சி இடையிலான விமானம் புறப்பட்ட போது அவசரகால கதவை திறந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவு என்று தகவல் வெளியானது. அவசரகால கதவை திறந்து சக பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவுத்துள்ளது.
newstm.in