ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.எஸ்.ஐ.எப் வீரர்கள் தற்கொலை செய்து கொண்டார். சத்தீஸ்கரை சேர்ந்த சிந்தாமணி தூக்கிட்டும், உ.பி.யை சேர்ந்த விகாஸ் சிங் துப்பாக்கியால் சுட்டும் தற்கொலை செய்து கொண்டனர். 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 பேர் தற்கொலையால் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
