கதவைத் தட்டிய 10 வயது சிறுமி… கடும் குளிரில் தாயார் மற்றும் இரு பிள்ளைகளுக்கு நேர்ந்த துயரம்


அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் வெட்டவெளியில் சிக்கிய தாயாரும் இரு பிஞ்சு சிறார்களும் உடல் உறைந்து பலியான சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உடல் உறைந்த நிலையில்

குளிர் தாங்க முடியாமல் 10 வயது சிறுமி, குடியிருப்பு ஒன்றின் கதவைத் தட்டி உதவி கோரிய நிலையிலேயே மூவர் இறந்துள்ள சம்பவம் தெரிய வந்தது.
35 வயதான மோனிகா கன்னாடி இவரது மகன்களான கைல் மில்டன்(9), மற்றும் மாலிக் மில்டன்(3) ஆகியோரே போண்டியாக் பகுதியில் உடல் உறைந்த நிலையில் சடலமாக மீடகப்பட்டவர்கள்.

கதவைத் தட்டிய 10 வயது சிறுமி... கடும் குளிரில் தாயார் மற்றும் இரு பிள்ளைகளுக்கு நேர்ந்த துயரம் | Mum Found Frozen Death With Two Children

உடற்கூராய்வில், அவர்கள் மூவரும் கடும் குளிர் காரணமாக இறந்துள்ளது உறுதியாகியுள்ளது. கடின உழைப்பாளியான மோனிகா, சமீப மாதங்களாக உளவியல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறுகின்றனர்.

மோனிகாவின் 10 வயது மகள் லில்லியே அருகாமையில் உள்ள குடியிருப்பின் கதவைத் தட்டி தமது சகோதரர்கள் மற்றும் தாயாருக்கு உதவ வேண்டும் என கோரியவர்.
தற்போது லில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

மோனிகாவுக்கு தனியாக குடியிருப்பு இருந்தாலும், உளவியல் பிரச்சனை இருப்பதால், குடியிருப்புக்கு வெளியே உறைவிடம் தேடியுள்ளதாக கூறுகின்றனர்.
மட்டுமின்றி, மூன்று வாரங்களுக்கு முன்னர், தமது பிள்ளைகள் மூவருடன் வீட்டைவிட்டு வெளியேறவும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

திடீரென்று மாயமானதாக

அவருக்கு உதவ குடும்பத்தினர் தயாரான நிலையில், அவர் திடீரென்று மாயமானதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மோனிகாவுக்கு உளவியல் பாதிப்பு இருப்பதாலையே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது என அதிகாரிகள் தரப்பு கூறுகின்றனர்.

கதவைத் தட்டிய 10 வயது சிறுமி... கடும் குளிரில் தாயார் மற்றும் இரு பிள்ளைகளுக்கு நேர்ந்த துயரம் | Mum Found Frozen Death With Two Children

Picture: WJBK

மேலும், கடும் குளிரில் போதிய பாதுகாப்பு இல்லாமல் ஒரு தாயாரும் பிள்ளைகளும் தெருவில் நடமாடுவதாக அப்பகுதி மக்கள் ஷெரிஃப் அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

ஆனால் அவர்களாலும் அந்த குடும்பத்தை உரிய நேரத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, மோனிகாவின் சகோதரர் வார இறுதி நால் முழுவதும் சகோதரி குடும்பத்தை இடைவிடாமல் தேடி வந்துள்ளார் என குடும்பத்தினர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.